மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான "மங்காத்தா" படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருகின்றனர். இதனால் மங்காத்தா படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி அமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் "மங்காத்தா". இதுவரை அஜீத்தை பார்த்திராத வித்யாசமான கேரக்டருடனும், வித்யாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அஜீத்திற்கு இது 50வது படமும் கூட. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்வதற்கான வேலை நடந்து வருகிறது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல விலைக்கு இப்படம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இப்படத்தை வாங்க இன்னும் யாரும் முன்வரவில்லை. இதற்கு காரணம், இப்படத்தினை தயாரித்து இருக்கும் துரை தயாநிதியின் தயாரி்ப்பு தான். இவர் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் ஆவார்.
விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் இப்படம் அமைந்திருந்தாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், தயாநிதி அழகி பேனரில் படத்தை வாங்குவதற்கும், அதனை ரிலீஸ் செய்வதற்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மங்காத்தா படக்குழு முழித்து கொண்டு இருக்கிறது.
இதுஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அஜீத்தே தனது சொந்தப் பொறுப்பில் இந்தபடத்தை வெளியிட வேண்டும் என்றும், ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவை போய் பார்த்து விட்டு வர வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அஜீத்தோ, நான் அப்படி போய் பார்த்தால் அது சுயநலத்துக்காக செய்த மாதிரி ஆகிவிடும். படத்தை தைரியமாக வெளியிடுங்கள், ஒன்றும் ஆகாது என்று கூறி வருகிறாராம்.
Source: Dinamalar

No comments:
Post a Comment